சாம்பல் புதன் 2023: லெண்ட் தவக்காலத்தின் முதல் நாள் இன்று; அதன் வரலாறும் முக்கியத்துவமும்
இன்று லெண்ட் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதன் (Ash Wednesday). உலகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் உண்ணாவிரதத்தின் புனித நாள் இன்று. ஷ்ரோவ் செவ்வாய்க்கு அடுத்த நாளாகவும், தவக்காலத்தின் முதல் நாளாகவும் கொண்டாடப்படும் இந்த சாம்பல் திருநாள், ஈஸ்டருக்கு 40 நாள் முன்னால் வரும். கிறிஸ்மஸ் திருநாள் போலல்லாமல், இந்த சாம்பல் புதன் மற்றும் ஈஸ்டர் ஒரு குறிப்பிட்ட தேதியில் வராது. பாரம்பரியமாக லெண்ட் தவக்காலம் என்பது, ஈஸ்டருக்கு, ஏழு வாரம் முன்(திங்கட்கிழமை) துவங்கி, ஈஸ்டருக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. உலகெங்கிலும் கிறிஸ்தவர்கள் இந்த சாம்பல் புதன்கிழமையன்று, பிரார்த்தனைகள், தொண்டு செயல்கள் மற்றும் துக்கங்களுக்கான நேரமாக கருதுகின்றனர்.
சாம்பல் புதனின் வரலாறு
சாம்பல் புதனன்று, பாதிரியார்கள் தேவாலயத்திற்கு வரும் ஒவ்வொரு நபரின் நெற்றியிலும், சாம்பலைத் தடவுவார்கள் பழங்கால ரோமில், சாம்பல் புதன் தொடங்கியதாக கூறப்படுகிறது. அங்கு பாவம் செய்தவர்கள், பொது மன்னிப்பு வேண்டி, சாக்கு உடைகளை அணிந்து, சாம்பலால் தங்களை மூடிக்கொண்டதாக வரலாறு. இந்த 40 நாட்கள் உண்ணாவிரதம்- தவக்காலம் (லெண்ட்), ஈஸ்டருடன் முடிவடையும். ஆரம்பகாலத்தில், கிறிஸ்தவ தேவாலயத்தில், லென்ட் கொண்டாட்டங்கள் நீண்ட நாட்கள் கொண்டாடப்பட்டது எனக்கூறப்படுகிறது. அதாவது, ஈஸ்டருக்கு ஆறு வாரங்களுக்கு(42 நாட்கள்) முன்னதாகவே தொடங்கியது என்றும், அதில், 36 நாட்கள் (ஞாயிறு தவிர) மட்டுமே விரத நாட்களாக கடைபிடிக்கப்பட்டது என்றும் அறியப்படுகிறது. 7ஆம் நூற்றாண்டில் தான், பாலைவனத்தில் இயேசு கிறிஸ்துவின் விரத நாட்களை பின்பற்றி, தவக்காலத்தின் 40 நாட்கள், நோன்பு நாட்களாக நிறுவப்பட்டது.