Missing Day 2023: காதலர் எதிர்ப்பு வாரத்தின் ஆறாம் நாள் இன்று
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரம், காதலர் தினத்துடன் முடிவடைந்த 'காதலர் வாரம்', காதலர்களுக்கு அர்பணிக்கப்பட்டது போல, பிப்ரவரி 14, காதலர் தினத்திற்குப் பிறகு வரும் ஒரு வாரம் முழுவதும் மக்கள்,காதலர் எதிர்ப்பு தினமாக கொண்டாடுகிறார்கள்.
இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
இது ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் முடிவடைகிறது.
இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே Confession day), மிஸ்ஸிங் டே(missing day) மற்றும் பிரேக் அப் டே(Break-Up Day)என்று கொண்டாடப்படுகிறது.
இன்று பிப்ரவரி 20, மிஸ்ஸிங் டே(Missing Day) என கொண்டாடுகிறார்கள்.
காதல்
நீங்கள் யாரைவது மிகவும் மிஸ் செய்தால், எவ்வாறு அதில் இருந்து வெளிவருவது?
ஒரு காலத்தில், உங்கள் இதயத்திற்கு நெருக்கமாக இருந்த, ஆனால் தற்போது உங்கள் வாழ்க்கையில் இல்லாத ஒரு நபரை மிஸ் செய்தால், இந்த நாள் உங்களுக்கானது!
அவர்களுடன் இருந்த மகிழ்ச்சியான தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கவும், அவர்கள் நினைவிலிருந்து மீண்டு வரவும், இந்த நாளை தேர்வு செய்யலாம். ஆனால், அந்த நினைவுகளில் இருந்து எவ்வாறு மீள்வது?
அந்த நபருடன் தொடர்புடைய கசப்பான அனுபவங்களை நினைவு படுத்திப் பார்க்கவும். அந்த நபர் உங்கள் வாழ்க்கையில் திரும்பி வரமாட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
உங்கள் மனதை மாற்ற, யோகா மற்றும் தியானத்தைப் பயிற்சி செய்யுங்கள். ஆக்கப்பூர்வமான விஷயங்களில் ஈடுபடவும்.
உங்களைப் புரிந்துகொள்ளும் மற்றும் உங்களுக்கு உணர்ச்சிபூர்வமாக வழங்கக்கூடிய நபருடன் நேரத்தை செலவிடலாம்.