
ஸ்லாப் டே: காதலர் எதிர்ப்பு வாரத்தின் முதல் நாள் இன்று
செய்தி முன்னோட்டம்
நேற்று பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம்.
சென்ற வாரம் முழுவதும் காதலர் தின வாரமாக, வாலெண்டைன் வீக்காக முடிந்த நிலையில், இன்று முதல், அடுத்த ஒரு வாரத்தை, காதலர் எதிர்ப்பு வாரமாக கொண்டாடுகிறார்கள்.
இந்த வாரம், காதலில் தோல்வியுற்றவர்கள், சிங்கிள்கள், பிரிந்த காதலர்கள், தங்கள் கடந்த கால கசப்புகளை மறக்கும் விதமாக கொண்டாடுகிறார்கள்.
இன்று, பிப்ரவரி 15 , ஸ்லாப் டே(Slap day) தொடங்கி, பிப்ரவரி 21 அன்று பிரேக்அப் டேயுடன் (Break-up Day) முடிவடைகிறது.
இடையில் கிக் டே(Kick day), பெர்ஃப்யூம் டே(Perfume day), ஃப்ளர்ட் டே(Flirt day) , கன்ஃபெஷன் டே (Confession day), மிஸ்ஸிங் டே(missing day) என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்லாப் டே
ஸ்லாப் டேயின் முக்கியத்துவம்
உங்கள் முந்தைய காதலும், அதனை தொடர்ந்து கொண்டாடப்பட்ட காதலர் தினமும், உங்களுக்கு தரும் கசப்புணர்வுகளை நீக்க இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஸ்லாப் தினத்தில், உங்கள் இதயத்தை உடைத்த முன்னாள் காதலை, அதற்கு காரணமானவர்களை, 'பளார்' என அறையும் நாள்.
'அறைதல்' என்றால் அதே பொருள் படும்படி, அவர்களை அறைவது அன்று. உங்கள் மனக்கண் முன்னே, அவர்களை அறைந்து, உங்கள் ஆசை தீர அடைத்துவைத்து, அவர்களை உங்கள் வாழக்கையில் இருந்து தூக்கி எறிவதற்கான நாள்.
இந்த நாள், இளைஞர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் நாளாக கருதப்படுகிறது.
இந்நாளில், நீங்கள் இத்தனை நாட்களாக மனதில் புழுங்கி கொண்டிருந்த கசப்புணர்வுகளுக்கு விடை கொடுக்குமாறு, அதை மறந்து, நண்பர்களுடன் சந்தோஷமாக களிக்கலாம்.