தேநீர் மற்றும் காபி அடிக்ஷனை தடுக்க மாற்று பானங்கள் இதோ
நமது ஊரில் பலருக்கும் காலை பொழுது புலர்வதே, சூடாக டீ அல்லது காபி உடன் தான் தொடங்குகிறது. எனினும் அதில் பலரும் ஒரு நாளைக்கு கணக்கு வழக்கில்லாமல் டீ மற்றும் காபி-ஐ குடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, இந்த அதீத காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம், சற்றே ஆரோக்கிய கேடு என மருத்துவர்கள் கூறுகிறார்கள். சரி, இந்த அடிக்ஷன் பழக்கத்தில் இருந்து எப்படி மீள்வது? அதற்கு மாற்றாக வேறு என்ன பானங்களை குடிக்கலாம் என்பதை மேற்கொண்டு தெரிந்து கொள்ளுங்கள்.
மூலிகை தேநீர்
பல மூலிகை டீ-க்கள் இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் நிறைந்துள்ளது. எனினும் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றான, ஆரோக்கியமான தேர்வு இதுதான். உங்கள் தினசரி டோஸ் காபி அல்லது டீயை, கிரீன் டீ, ஹைபிஸ்கஸ் டீ, பெப்பர்மின்ட் டீ அல்லது கெமோமில் டீ போன்ற மூலிகை டீ-க்களுடன் மாற்றலாம். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அவை காஃபின் இல்லாதவை, சுவையானவை மற்றும் உடலில் ஒரு நிதானமான, நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன.
இளநீர்
மற்றொரு ஆரோக்கியமான பானம் இளநீர். இது உங்கள் உடலை உள்ளே இருந்து குணப்படுத்தும் ஒரு இயற்கை அமுதம் ஆகும். இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதால், உங்கள் தினசரி காலை தேநீர் அல்லது காபியை, ஒரு கப் இளநீராக தேர்வு செய்துகொள்ளுங்கள். எனினும், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உங்கள் தினசரி உணவில் சேர்க்கலாமா என்பதை உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
தாவர அடிப்படையிலான மில்க்ஷேக்ஸ்
தேங்காய் பால் மற்றும் பாதாம் பால் போன்ற தாவர அடிப்படையிலான பால் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். அவை மிகவும் ஆரோக்கியமானவை மற்றும் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கூடியவை. அவற்றுடன், பழங்கள், தேன், வெல்லம் மற்றும் நட்ஸ் உள்ளிட்டவைகளை சேர்த்து, ஸ்மூத்திகள் அல்லது மில்க் ஷேக்குகளை தயார் செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த சுவையுடன் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.
டிடாக்ஸ் பானங்கள், கொம்புச்சா மற்றும் லெமன் ட்ரின்க்
தேநீர் மற்றும் காபி இரண்டிலும் காஃபின் நிரம்பியுள்ளது. இது உங்கள் தூக்க முறைகளை கடுமையாக பாதிக்கலாம், இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம் மற்றும் மனஅழுத்தத்தை தூண்டலாம். அதனுடன், அதற்கு பதிலாக டிடாக்ஸ் பானங்களை வீட்டிலேயே தயாரித்து, உடலை சுத்திகரிப்பு செய்யலாம். குறிப்பாக இடைவேளையின் போது அருந்தும் தேநீருக்கு பதிலாக, வீட்டில் எலுமிச்சை தண்ணீர் மற்றும் கொம்புச்சா டீ போன்றவை தயார் செய்து அருந்தலாம்.