அடுத்த செய்திக் கட்டுரை

"இயற்கையோடு ஒன்றி வாழ்": மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு டிப்ஸ் சொல்லும் 100 வயது தாத்தா
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 20, 2023
03:43 pm
செய்தி முன்னோட்டம்
மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக கருதுவது ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் நீண்டகாலம் வாழ்வதுதான்.
அந்த சந்தோஷமான வாழ்க்கை கிடைக்க என்ன வழி என்பதை, செஞ்சுரி அடித்த, 100 வயதை தொட்ட முதியவர்களை தவிர வேறு யாரு சிறப்பாக ஐடியா தரமுடியும்?
அப்படி, 'அங்கிள் ஜாக்' என்று செல்லமாக அழைக்கப்படும் தாத்தா ஒருவர், மகிழ்ச்சியாக வாழ, சூப்பர் டிப்ஸ் தந்துள்ளார்.
அவரின் அட்வைஸ்படி, மொபைல் போன்-ஐ தூர எறிந்துவிட்டு, இயற்கையை அரவணைத்து வாழ்ந்தால், பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழலாம்.
மொபைல் போன்களில் கவனம் செலுத்துவது, ஒருவரின் மனதை வெறுமையாக்கி விடும் என கூறுகிறார்.
இந்த தாத்தாவின் சூப்பர் அட்வைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.