Page Loader
கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்
மூன்று வருடங்கள் பிறகு மகனுடன் இணைந்த தந்தை

கோவிட்-19 அச்சம் காரணமாக, மூன்று ஆண்டுகளாக வீட்டில், 10 வயது மகனுடன், தன்னைப் பூட்டிக்கொண்ட பெண்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2023
01:34 pm

செய்தி முன்னோட்டம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில், பல உயிர்கள் மடிய, உலக மக்களின் இதயங்களில் நீடித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சிறிது காலம் அதனுடன் போராடிய பிறகு, அதனுடன் பயணப்பட உலகம் கற்றுக்கொண்டது எனதான் கூற வேண்டும். ஆனால், இன்னமும் ஒரு சில மக்கள் பயத்தின் பிடியில் இருந்து மீளவில்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. வடஇந்தியாவில் உள்ள, குருகிராம் பகுதியைச் சேர்ந்த 'முன்முன் மாஜி' என்ற பெண், கோவிட்-19-ன் பயம் காரணமாக, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, தனது 10 வயது மகனுடன் சிறைவாசத்தில் வாழ்ந்து வந்துள்ளார். 2020 இல் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டதை தொடர்ந்து, அந்தப்பெண்மணியின் கணவர் வேலைக்கு சென்றுள்ளார்.

வைரல் செய்தி

கொரோனா பயத்தால், கணவருக்கும் 'No Entry'

நோய் தொற்றுக்கு பயந்து, அவரையும் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை அந்த பெண். இதன் விளைவாக, அந்த நபர் அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதிருந்து, அவர், அவர்கள் இருவரையும் வீடியோ அழைப்புகள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்தது. தொடர்ந்து, அவர்களின் வீட்டு வாடகையை செலுத்தி வந்துள்ளார். அவர்களுக்கு தேவையான பொருட்களை வீட்டின் முன் வைத்து வைத்துள்ளார். ஆனால் வீட்டிற்குள் அனுமதி இல்லை. அடுத்தகட்டமாக, காலியான கேஸ் சிலிண்டரை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்ட பிறகு, இண்டக்ஷன் அடுப்பு மூலம் சமையல் செய்துள்ளார் இந்த பெண். தற்போது, கணவரின் கோரிக்கையினை அடுத்த, போலீசார் அந்த பெண்ணையும், குழந்தையையும் மீட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.