
இரவு 7 மணிக்கு மேல் உண்ண கூடாத 5 உணவு வகைகள்
செய்தி முன்னோட்டம்
இரவு நேர உணவு, மனிதர்களுக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் தான், நம் முன்னோர்கள் காலையில் ராஜா போன்றும், மதியம் சாமானியனை போன்றும், இரவில் யாசகர் போன்றும் உணவு உண்ண வேண்டுமென சொல்லி வைத்தனர்.
ஆனால் நாம் அதற்கு நேர் மாறாக அதிகப்படியான உணவுகளை, இரவு நேரத்தில் உட்கொள்கிறோம். மேலும் பிரயாணி போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளையும் உண்கிறோம்.
இது செரிமான பிரச்சனை தொடங்கி ரத்த அழுத்தம் வரை பல்வேறு நோய்களை உண்டாக்குகிறது.
அந்த வகையில் இரவு 7 மணிக்கு மேல் உண்ணக்கூடாத, 5 உணவுகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2nd card
இரவில் உண்ண கூடாதா உணவுகள்-2
மட்டன் பிரியாணி- இந்தியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் மிக முக்கிய உணவாக பிரியாணி உள்ளது.
ஆனால் பிரியாணிகளில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்து நமக்கு பல்வேறு நோய்களை விளைவிக்கிறது.
மட்டன் பிரியாணியை இரவில் உண்பது தற்போது அதிகமாக ஏற்படும், ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை(NAFLD) உண்டாக்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு சிறிய கப் மட்டன் பிரியாணி கூட, உங்கள் உடலில் 600 முதல் 700 கலோரிகளை சேர்த்து விடும்.
3rd card
இரவில் உண்ண கூடாதா உணவுகள்-3
கார உணவுகள்- இந்தியர்கள் நாம் பிரியாணியை போலவே, கார உணவுகளையும் அதிகமாக விரும்பி நம் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.
இரவு நேரத்தில் கார உணவுகளை உண்பது, இதயத்தை பாதிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வகை உணவுகள், நெஞ்செரிச்சல் தொடங்கி மாரடைப்பு வரை ஏற்படுத்தக் கூடும்.
இனிப்புகள்- இரவு 7 மணிக்கு மேல், இனிப்புகள் உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சிலர் உணவு உண்ட பின் இனிப்புகளை ஜீரண சக்தியை அதிகரிப்பதற்காக எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் அவ்வாறு செய்வது பலன் அளிக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு இனிப்புகள் உட்கொள்ளும் போது செரிமானத்தை தடுத்து இரவு உறக்கத்தை பாதிக்கிறது.
4th card
இரவில் உண்ண கூடாதா உணவுகள்-4
பக்கோடா- நீங்கள் தவிர்க்க முடியாத தீனி வகைகளில் பக்கோடாவிற்கு என்றுமே இடம் இருக்கும். அந்த வகையில் மக்கள் பக்கோடாவை இரவு 7 மணிக்கு மேல் உண்ணும் பழக்கத்தை வைத்துள்ளனர்.
அமிலத்தன்மை கொண்ட பக்கோடாவை இரவு நேரத்தில் உண்ணும்போது, செரிமான பிரச்சினை ஏற்படுத்தி நம் தூக்கத்தையும் பாதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேனீர், காபி- நம்மில் பலருக்கும் இரவு உறங்கும் போது தேநீர் அல்லது காப்பியை குடித்துவிட்டு உறங்கும் பழக்கம் இருக்கும்.
அவற்றை இன்று முதல் தவிர்ப்பது நல்லது. தேநீர் மற்றும் காப்பியில் உள்ள காஃபின் நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வதை தடுக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனால், அவற்றுக்கு பதில், பழச்சாறு உள்ளிட்டவற்றை பருகுவது நல்லது.