ஏர் பிரையரில் சமைக்கும்போது கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்
செய்தி முன்னோட்டம்
ஏர் பிரையர் என்பது குறைந்த எண்ணெயில் உணவுகளைப் பொரிப்பதை எளிதாக்கும் ஒரு நவீனக் கருவியாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள், அதேவேளையில் பொரித்த உணவுகளின் சுவையையும் விரும்புபவர்களுக்கு இந்தக் கருவி மிகவும் ஏற்றது. இருப்பினும், ஏர் பிரையர் சரியாகப் பயன்படுத்தி, அதன் முழுப் பலனையும் பெற்று, பாதுகாப்பாக இருக்கச் சில முக்கியக் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
#1
ஏர் பிரையரின் கொள்ளளவைக் கவனியுங்கள்
ஏர் பிரையர் வாங்கும்போது அதன் கொள்ளளவு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சிறிய அளவிலான ஏர் பிரையர் பெரிய குடும்பத்திற்குப் போதுமானதாக இருக்காது. எனவே, உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பொரிப்பானைத் தேர்வு செய்யுங்கள். உங்கள் குடும்பம் பெரியதாக இருந்தால், ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவைச் சமைக்கக்கூடிய பெரிய பொரிப்பானைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம், மீண்டும் மீண்டும் சமைப்பதைத் தவிர்த்து நேரத்தைச் சேமிக்கலாம்.
#2
வெப்பநிலை அமைப்புகளைப் புரிந்து கொள்ளுங்கள்
ஏர் பிரையரில் உள்ள வெப்பநிலை அமைப்புகளைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஒவ்வொரு விதமான உணவுக்கும் வெவ்வேறு வெப்ப நிலை தேவைப்படும். பெரும்பாலான ஏர் பிரையர்களில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலை அமைப்புகள் (preset temperature settings) இருக்கும். இது உங்கள் வேலையை இன்னும் சுலபமாக்கும். புதிய உணவைச் சமைக்கும் முன், அதன் செய்முறை குறிப்பை நன்றாகப் படித்து, அதில் குறிப்பிட்டுள்ள வெப்பநிலையைப் பின்பற்றுங்கள். அப்போதுதான் உணவு சரியாக வெந்து, சுவையாகவும் இருக்கும்.
#3
சரியான நேரத்தைக் கணக்கிடுங்கள்
ஏர் பிரையரில் உணவு சமைக்கும் நேரமும் மிகவும் முக்கியமானது. அதிக நேரம் சமைத்தால் உணவு கருகிவிடும் அல்லது அதன் சுவை மாறிவிடும். அதனால், ஒவ்வொரு உணவிற்கும் குறிப்பிடப்பட்டுள்ள சமையல் நேரத்தைத் தவறாமல் பின்பற்றுங்கள். ஒரு புதிய உணவை முதல்முறை சமைக்கிறீர்கள் என்றால், அதனை அவ்வப்போது திறந்து பார்த்து, உணவு சரியாக வெந்துள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் அது சுவையாக இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
#4
எண்ணெயைச் சரியான அளவில் பயன்படுத்துங்கள்
ஏர் பிரையர் ஏர் பிரையர் குறைந்த எண்ணெயிலேயே செயல்பட்டாலும், சரியான அளவில் எண்ணெயைப் பயன்படுத்துவது அவசியம். அதிக எண்ணெய் ஊற்றினால் உணவு பிசுபிசுப்பாகி, அதன் சுவையும் கெட்டுப்போகும். மேலும், அதிக எண்ணெய் பயன்படுத்துவது உடல் நலத்திற்கும் நல்லதல்ல. ஆகவே, எப்போதும் குறிப்பிட்ட அளவு எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள். உணவைச் சமைக்கும் முன் சமையல் குறிப்பை (Recipe) நன்றாகப் படித்து, தவறுகள் நடக்காமல் கவனித்துக்கொள்ளுங்கள்.
#5
சுத்தம் செய்வதில் கவனம்
ஏர் பிரையரை தொடர்ந்து சுத்தம் செய்வது மிக அவசியமானது. உணவுத் துகள்களும், எண்ணெய் பிசுபிசுப்பும் சேர்ந்துவிட்டால், இந்தக் கருவி சரியாகச் செயல்படாது. எனவே, ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் இதனைத் தூய்மை செய்யுங்கள். ஏர் பிரையரை வெளிப்புறத்தை ஈரமான துணியால் துடைக்கவும். உட்புறத்தை வெந்நீர் மற்றும் சோப்புப் பயன்படுத்தித் தூய்மை செய்யவும். இந்த எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஏர் பிரையரை சரியாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் நலமான வாழ்க்கை முறையையும் மேற்கொள்ளலாம்.