LOADING...
வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள் 
செரிமானத்தை அதிகரிக்கவும், வாயு பிரச்னைகளை தவிர்க்கவும், சில வீட்டு வைத்தியங்கள் இதோ

வாய்வு மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை தவிர்க்க எளிய வீட்டு வைத்தியங்கள் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 26, 2023
08:59 am

செய்தி முன்னோட்டம்

சூடாக சமோசா, பஜ்ஜி, பர்கர்..ருசியான உணவுகளின் பெயர்களை கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுகிறதா? ஆனால், அதை சாப்பிட்ட பின் அவஸ்தைபடுபவரா நீங்கள்? வாய்வு தொல்லை, உடலில் ஏற்படும், இயற்கையான நிலையே என்றாலும், வயிற்று உப்புசம், வீக்கம், ஏப்பம், துர்நாற்றம் மற்றும் வாய்வு போன்றவை அடிக்கடி ஏற்பட்டால், அசௌகரியம் மட்டுமன்றி நாளடைவில் அது உடல் கோளாறுக்கு வழிவகுக்கும். நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனைகளை அனுபவிப்பவராக இருந்தால், அதை சரி செய்ய இயற்கையான வீட்டு வைத்தியங்கள் மூலம் நிவாரணம் பெறலாம். ஓமம்: ஓமத்தில் உள்ள தைமால் எனப்படும் மூலப்பொருள், வாயு மற்றும் அதன் விளைவாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. வாய்வு பிரச்சனை ஏற்படும்போது, அரை டீஸ்பூன் ஓமத்தை, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரோடு விழுங்கவும்.

card 2

செரிமானத்திற்கு உதவும் இஞ்சி, ஏலக்காய்

பெருஞ்சீரகம், இஞ்சி, ஏலக்காய்: பெருஞ்சீரகம் (சோம்பு), இஞ்சி மற்றும் ஏலக்காய் ஆகியவை உணவிற்கு சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் மட்டுமல்ல, அவை சிறந்த மூலிகைகள் ஆகும். அவற்றை உட்கொள்ளும் போது, உங்கள் செரிமானத்திற்கு உதவுகின்றன. இந்த மூன்றையும் பொடித்து, தினமும் உண்பதால், வாயு பிரச்சனைகளை தவிர்க்கலாம். பேக்கிங் சோடா கலந்த லெமன் ஜூஸ்: ஒரு டம்ளர் லெமன் ஜூஸில், ஒரு சிட்டிகை பேக்கிங் சோடா கலந்து பருகினால், உங்களுக்கு ஏற்பட்டுள்ள வாய்வு தொல்லை உடனடியாக நீங்குகிறது. நீங்கள் கடைகளில் வாங்கும் ஸ்ப்ரைட், ஈனோ போன்றவை, இந்த கலவையே. சீரக தண்ணீர்: தினமும் சீரக கஷாயம் குடித்துவர, செரிமான பிரச்சனைகள் அண்டாது.சீரகத்தில், சில அத்தியாவசிய எண்ணெய்கள் ஏராளமாக உள்ளன, அவை உணவை ஜீரணிக்க உதவும்.