
இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு
செய்தி முன்னோட்டம்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் இர்பானின் மனைவிக்கு கடந்த ஜூலை மாதம் குழந்தை பிறந்தது.
பிரசவத்தின் போது, ஆபரேஷன் தியேட்டரின் உள்ளே இருந்த இர்பான், குழந்தையின் தொப்புள் கொடியை கத்திரிக்கோலால் துண்டித்தார்.
இதனை வீடியோவாக பதிவு செய்து, தனது யூடியூப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த வீடியோ வைரலாகிய நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி நேற்று தெரிவித்தார்.
அமைச்சர் பதில்
மன்னிக்க முடியாத குற்றம்: அமைச்சர் காட்டம்
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், "குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது. அவர் செய்தது மன்னிக்கக் கூடியது அல்ல; கண்டிக்கக் கூடியது".
"இந்த விவகாரத்தில் மருத்துவர் நிவேதிதா மீதும் போலீசார்களுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்களை காப்பாற்ற தி.மு.க. அரசு எப்போதும் நினைக்காது".
"இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டாலும், நாம் விட்டுவிட மாட்டோம். சட்டம் ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்று காட்டமாக கூறினார்.
embed
Twitter Post
#WATCH | "இர்ஃபான் மன்னிப்பு கேட்டாலும் விட முடியாது" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி#SunNews | #MaSubramanian | #YoutuberIrfan pic.twitter.com/957UtGtuKy— Sun News (@sunnewstamil) October 22, 2024