NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    இந்தியா

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    எழுதியவர் Nivetha P
    Feb 23, 2023, 05:29 pm 0 நிமிட வாசிப்பு
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
    நரபலிக்கு பயந்து தமிழகம் வந்த இளம்பெண் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷாலினி ஷர்மா முதுகலை பட்டதாரி ஆவார். இங்குவந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு வழங்ககோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏ.பி.வி.பி. அமைப்பினை சேர்ந்த எனது வளர்ப்பு தாய் சுதா ஷர்மா மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கைக்கொண்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் தன்னை நரபலி கொடுக்கப்போவதாகவும், முன்னதாக தனது சகோதரன் உள்பட 3பேரை நரபலி கொடுத்ததாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    தஞ்சமடைந்த பெண்ணின் பெற்றோர் பதிலளிக்க உத்தரவு

    மேலும், ஆன்லைனில் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் விசாரணையும் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மனுதாரர் ஷாலினி தனக்கு பாதுகாப்பு கொடுத்த தட்சிணாமூர்த்தி, விக்னேஷ் ஆகியோருக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நீதிபதி, இந்த நூற்றாண்டிலும் மாந்திரீகம், பில்லி, சூனியம் முதலியவற்றை நம்பி நரபலி கொடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறினார். தஞ்சமடைந்த அந்த பெண்ணிற்கும், அவருக்கு உதவிய 2 பேருக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்து ஷாலினி ஷர்மாவின் பெற்றோர் பதிலளிக்க வேண்டும் என்றும், இது குறித்த அறிக்கையினை போபால் காவல் ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்
    மத்திய பிரதேசம்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: பிப்ரவரி 23- பிப்ரவரி 27 சென்னை
    3 வகையான சத்துமாவு திட்டம்: மார்ச் 1ஆம் தேதி ஆரம்பம் தமிழக அரசு
    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் சாமி தரிசனம் சிதம்பரம் கோவில்
    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஈரோடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மத்திய பிரேதேசத்தை சேர்ந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு சென்னை
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு தமிழ்நாடு
    நெடுஞ்சாலைகளில் திரியும் மாடுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசல் - தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டிஸ் திருச்செந்தூர்
    தேசிய அலுவல் மொழி குறித்து காயிதே மில்லத் - வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு

    மத்திய பிரதேசம்

    வீடியோ: இந்தியாவிற்கு வந்த ஆப்பிரிக்க புலிகளின் முதல் ரியாக்ஷன் ஆப்பிரிக்கா
    வைரல் செய்தி: மத்திய பிரதேச மாநிலத்தில் கிளிக்கும், மைனாவிற்கும் நடந்த வினோத திருமணம் வைரல் செய்தி
    வைரல் வீடியோ: காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கிய 'பாஜக MLAவின் ஆட்கள்' பாஜக
    சூடான இரும்பு கம்பியை வைத்து 51 முறை குத்தியதால் மூன்று மாத குழந்தை பலி இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023