
வேறொருவுடன் தொடர்பிலிருந்த கள்ளக்காதலியை தீயிட்டு கொளுத்திய வாலிபர் - க்ரைம் ஸ்டோரி
செய்தி முன்னோட்டம்
செங்கல்பட்டு, பாலூர் ஊராட்சி-பகத்சிங் பகுதியில் வசிப்பவர் அருண்செல்வம்(32), இவரது மனைவி பிரியா(28).
2 குழந்தைகளுக்கு தாயான பிரியாவுக்கும் அதேப்பகுதியிலுள்ள பிரதாப்(35)என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இவர்கள் குறித்த விவகாரம் பிரதாப் மனைவிக்கு தெரியவந்த நிலையில் அவர் தனது அண்ணனை கொண்டு பிரதாப்'பை கண்டித்துள்ளார்.
இதன்காரணமாக பிரதாப் தனது கள்ளக்காதலியான பிரியாவிடம் கடந்த ஒருவாரமாக பேசுவதில்லை என்று தெரிகிறது.
இதற்கிடையே பிரியாவிற்கும் அதேப்பகுதியில் உள்ள வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிந்துக்கொண்ட பிரதாப், பிரியாவிடம் சென்று கேட்கையில் அவர் அதற்கு சரியாக பதிலளிக்கவில்லையாம்.
தொடர்ந்து பிரதாபை பார்க்கும் இடத்தில் எல்லாம் வைத்து பிரியா ஆபாசமாக திட்டியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
க்ரைம்
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரியா
இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட பிரதாப், பிரியா தனது வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது சென்று கொலை செய்ய திட்டமிட்டு, அவர் மீது மண்ணெண்ணெயினை ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர் தப்பியுள்ளார்.
பிரியாவிடம் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினரும், அவரது கணவர் அருண் செல்வனும் ஓடி சென்று பிரியாவை மீட்டு உடனே செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து தகவலளிக்கப்பட்டதன் பேரில் அங்கு சென்ற போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பிரதாப்பை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தலைப்பகுதி, கைகள், கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தீ காயம் ஏற்பட்டுள்ளதால் பிரியா தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.