சென்னை கலாஷேத்ரா மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் - மகளிர் ஆணைய தலைவர்
சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. இந்நிலையில் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை தந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர். அதன்படி பாலியல்தொல்லை கொடுத்த பேராசிரியர் உள்பட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர் அமைப்பு கடிதம் அளித்ததாகவும் இன்று(மார்ச்.,31)காலை செய்திகள் வெளியானது. மேலும் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தலைவர் நேரில் விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில் மகளிர் ஆணையத்தலைவர் குமரி, பாலியல் விவகாரம் குறித்து கலாஷேத்ராமாணவிகள் 12பேரிடம் தொடர்ந்து 5 மணிநேரம் விசாரணை நடத்தியதில் 4 பேர்மீது எழுத்துப்பூர்வமாக புகார்தந்துள்ளார்கள். முன்னாள் மாணவிகளும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். மாணவிகள் அளித்த புகார்களின்படி சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.