
சென்னை கலாஷேத்ரா பாலியல் விவகாரம் - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம்
செய்தி முன்னோட்டம்
சென்னை கலாஷேத்ராவில் பெண்கள் பாலியல் தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் கலாஷேத்ராவில் பாலியல்தொல்லை தந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.
இதனைதொடர்ந்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் என்று மாணவ மாணவிகள் முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.
மேலும் பாலியல் தொல்லை விவகாரத்தில் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒன்றிய கலாச்சார அமைச்சகத்திற்கு மாணவர் அமைப்பு தற்போது கடிதம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த புகார் கடிதத்தில் சம்பந்தப்பட்ட 4 பேரை இயக்குநர் ரேவதி, நடனத்துறைத்தலைவர் ஜொல்ஸ்னா மேனன் ஆகியோர் காப்பாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை கலாஷேத்ரா - ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு கடிதம்
#BREAKING | சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு மாணவர் அமைப்பு கடிதம்!#SunNews | #KalakshetraCollege pic.twitter.com/62YRJ5UKqO
— Sun News (@sunnewstamil) March 31, 2023