
'குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கில் தொங்க தயார்': பிரிஜ் பூஷன்
செய்தி முன்னோட்டம்
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரிஜ் பூஷன் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் இன்று(மே 31) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"என் மீதான ஒரு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும், நான் தூக்கில் தொங்கிவிடுவேன். உங்களிடம்(மல்யுத்த வீரர்கள்) ஏதேனும் ஆதாரம் இருந்தால், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும். எந்த தண்டனையையும் ஏற்க நான் தயாராக இருக்கிறேன்," என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இன்று பிற்பகல், "டெல்லி காவல்துறை தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்" என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
details
முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த டெல்லி காவல்துறை, "பெண்மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்த வழக்கில் போலீசார் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. முழுமையான விசாரணைக்குப் பின்னரே நீதிமன்றத்தில் முறையான அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்று கூறியுள்ளது.
ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பிரிஜ் பூஷனுக்கு எதிராக நான்கு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.