Page Loader
கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை! 
வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு

கேரளா வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு - தொடர் சர்ச்சை! 

எழுதியவர் Siranjeevi
May 03, 2023
12:33 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது, திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்கிறது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் வந்தே பாரத் ரயிலில் அடிக்கடி புகார்கள் எழுந்து வரத்தொடங்கியது. மழைநீர் ஒழுகுவதாகவும், மாடு வாகனத்தில் மோதுவதும், அடையாளம் தெரியாத நபர்கள் ரயிலின் மீது கல்வீசுவதும் என புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே, வந்தே பாரத் ரயிலில் பயணித்த நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பரோட்டாவில் புழு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பரோட்டாவை மூடி வைத்து, ரயில் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் வைரலாகி விமர்சனம் ஆகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post