லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை
செய்தி முன்னோட்டம்
சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஓர் ஜவுளிக்கடையில் பெண்கள் கும்பல் ரூ.2 லட்சம் மதிப்புடைய புடவைகளை திருடியதாக கூறப்படும் சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
விஜயவாடா பகுதியினை சேர்ந்த 6 பெண்கள், சென்னை பெசன்ட் நகரிலுள்ள ஜவுளிக்கடைக்கு துணி எடுக்கும் வாடிக்கையாளர்கள் போல் வந்துள்ளனர்.
கடந்த அக்.,28ம் தேதி இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி பதிவுகளை காவல்துறை ஆய்வு செய்துள்ளது.
அந்த ஆய்வில், இந்த கும்பலை சேர்ந்த பெண்கள் அந்த ஜவுளிக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுடன் பேச்சு கொடுக்கையில், மற்ற பெண்கள் புடவைகளை எடுத்து தங்கள் புடவைக்குள் மறைத்து வைத்துக்கொள்கிறார்கள்.
இந்த பெண்கள் கும்பல் அனைவருமே புடவை அணிந்துள்ளனர் என்பதும் சிசிடிவி'யில் பதிவாகியுள்ளது.
திருட்டு
திருடிய புடவைகளை திருப்பி கொடுத்த திருட்டு கும்பல்
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை காவல்துறையினருக்கு எந்தவொரு தகவலும் இக்கும்பல் குறித்து கிடைக்கவில்லை.
இதனிடையே இப்பெண்கள் விஜயவாடாவை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்னும் சந்தேகம் சென்னை போலீசாருக்கு எழுந்துள்ளது.
எனவே இத்தகவல் விஜயவாடா போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் தங்கள் விசாரணையினை மேற்கொண்டு அந்த பெண்கள் கும்பலை பிடித்துள்ளனர்.
பிடிபட்ட அந்த கும்பல் தங்கள்மீது வழக்குப்பதிவாகாமல் இருக்க திருடிய புடவைகள் அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளனர்.
அதனை விஜயவாடா போலீசார் சென்னை சாஸ்திரி நகர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த புடவைகளின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் ஆகும்.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் தங்கள் கைவரிசையை காட்டுவதனை இந்த கும்பல் வழக்கமாக வைத்துள்ளனர்.
எனவே, தீபாவளி முடிந்தப்பின்னர் சென்னை போலீசார் அவர்களை கைது செய்ய விஜயவாடா விரைகிறார்கள்.