
இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிகமான பெண்கள் தங்கள் கணவனைக் கொலை செய்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், பாலின சமத்துவத்திற்கு ஏற்றவாறு சரியான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது.
பத்திரிகையாளர் தீபிகா நாராயண் பரத்வாஜ் குழுவால் தொகுக்கப்பட்ட தரவுகளின்படி இந்த ஆய்வு தகவல் வெளியாகி இருக்கிறது.
2022ல் ஒவ்வொரு 32 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள் என்று இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
உண்மையான புள்ளிவிவரங்கள் அதிகமாக இருக்கும் என்று தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில் ஆண்கள் தங்கள் மனைவிகளால் கொல்லப்பட்ட, 271 கொலை வழக்குகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
DETAILS
218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது
இவற்றில், 218 வழக்குகள் கள்ள தொடர்பினால் ஏற்பட்டது என்றும், இந்த வழக்குகளில் பெண்கள் தங்கள் காதலனுடன் சேர்ந்து சதி செய்து கணவனை கொன்றதாக கூறப்படுகிறது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
சுமார் 48 வழக்குகள் வீட்டுச் சண்டைகளால் ஏற்பட்டவை. 4 வழக்குகள் பணம் அல்லது காப்பீட்டு பிரச்சனைகளால் ஏற்பட்டது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் தான் அதிக கொலைகள் பதிவாகியுள்ளது. டிசம்பர் 2022இல், 47 கொலை வழக்குகள் பெண்கள் மீது போடப்பட்டுள்ளது. அந்த மாதம் மட்டும் ஒவ்வொரு 16 மணி நேரத்திற்கும் ஒரு பெண் தன் கணவனைக் கொலை செய்திருக்கிறாள்.
நாட்டில் நடக்கும் குற்றங்கள் குறித்து வெளியிடப்படும் செய்திகள் உண்மையான வழக்குகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறது என்றும் பரத்வாஜ் கூறியுள்ளார்.