தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்!
செய்தி முன்னோட்டம்
கடந்த சில தசாப்தங்களில் பெண்களின் வாழ்க்கை முறை மிகவும் உயர்ந்துள்ளது.
முன்பைவிட தற்போது, அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலை செய்கின்றனர்.
பெண் கல்வி குறித்தும், பெண்களுக்கான வேலைவாய்ப்பு குறித்தும் அதிகமாக பேசபடுகிறது. விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருந்தாலும், பெண் வேலை வாய்ப்பில் தமிழகம் ஒரு முன்னோடியாக இருக்கிறது.
தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி (2017-18), தமிழகத்தில் தான் வேலை செய்யும் பெண்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 15.93 லட்சம் பெண்கள் வேலை செய்பவர்களாக இருக்கிறார்கள்.
அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? 7.08 லட்சம்!
நாட்டில் வேலை செய்யும் பெண்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
பெண்
பெண் தொழில்முனைவோர்:
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது கர்நாடகா மாநிலம்.
ஆனால், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை கர்நாடக மாநிலத்தை விட தமிழகத்தில் மூன்று மடங்கு அதிகம் இருக்கிறது.
இந்தியா முழுவதும் பெண் தொழில் முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
முக்கியமாக, 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக தமிழக பெண்கள் தொழில் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் பெண் தொழில்முனைவோருக்கு சொந்தமான நிறுவனங்கள் சுமார் 10.87 லட்சம் இருக்கிறது.
இதிலும் தமிழகமே முதலிடத்தில் இருக்கிறது.
நாட்டில் மொத்தம் 80.5 லட்சம் பெண் தொழில்முனைவோர் நிறுவனங்கள் இருக்கிறது. அதில், 13.5 % நிறுவனங்கள் தமிழ் பெண்களுக்கு சொந்தமானது.