மும்பையின் முக்கிய சாலையில் சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த பெண்ணின் சடலம்
நேற்று, மத்திய மும்பையில் உள்ள குர்லாவில், சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மும்பை காவல்துறையின் கூற்றுப்படி, நேற்று (நவம்பர் 19) மதியம் 12.30 மணியளவில் ஒரு சூட்கேஸ் மர்மானமுறையில் சாலையில் கிடப்பதாக காவல்துறையினரு தகவல் கிடைத்துள்ளது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த சூட்கேசில் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி காவல்துறையினர் கூறியதன்படி, மெட்ரோ திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் சாந்தி நகரில் உள்ள சிஎஸ்டி சாலையில், பெண்ணின் சடலம் இந்த சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
CCTV பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது
பிரேத பரிசோதனையின் ஆரம்பகட்ட தகவல்கள்படி, இறந்து போன பெண்ணின் வயது 25-35 வயதிற்குள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்திருந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ச்சியாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணை கொன்றவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன