NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
    இந்தியா

    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Nivetha P
    February 27, 2023 | 05:42 pm 0 நிமிட வாசிப்பு
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்
    உத்தரப்பிரேதேசத்தில் சொத்திற்காக கணவன், இரு மகன்களை கொன்ற பெண் - அதிர்ச்சி தகவல்

    உத்தரப்பிரேதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹாஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா. 40 வயதான இவருக்கு ஆரவ், ஆர்யன் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவதேஷ் குப்தாவின் மனைவி இறந்தநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் அவர் நீலம் என்னும் பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. 2ம் திருமணத்திற்கு பிறகு அவதேஷ் குப்தா, நீலம், இரு மகன்கள், ஒரு மகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்கள். இந்நிலையில் கடந்த 25ம் தேதி இரவு நீலம் காவல் நிலையத்திற்கு போன் செய்து தனது கணவன் மற்றும் மகன்களை யாரோ ஒரு மர்ம கும்பல் கொலை செய்துவிட்டதாக தகவல் அளித்துள்ளார்.

    கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த பெண்

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் கழுத்து அறுக்கப்பட்டு இறந்த கிடந்த அவதேஷ் குப்தா, அவரது 2 மகன்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நீலம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து 8 மணி நேரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில் நீலம் உண்மை அனைத்தையும் கூறியுள்ளார். அவதேஷ் குப்தா தனது அனைத்து சொத்தையும் தனது மூத்த மனைவியின் பிள்ளைகளான ஆரவ் மற்றும் ஆர்யனுக்கு எழுதி வைப்பதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீலம், இவர்களை கொன்றுவிட்டால் அனைத்து சொத்தும் தனது பெயருக்கு வந்துவிடும் என்று சதி திட்டம் தீட்டி இந்த கொடூர கொலைகளை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    உத்தரப்பிரதேசம்
    இந்தியா
    காவல்துறை
    காவல்துறை

    உத்தரப்பிரதேசம்

    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் இந்தியா
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் இந்தியா

    இந்தியா

    சிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா
    தொடர் வீழ்ச்சியடைந்த தங்கம் விலை - இன்றைய விலை விவரம் தங்கம் வெள்ளி விலை
    பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி வைரல் செய்தி
    சாலையில் பணம் பறிக்க இப்படி ஒரு நூதன கொள்ளையா? உஷார்! தொழில்நுட்பம்

    காவல்துறை

    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் சென்னை
    திண்டுக்கல்லில் நர்சிங் மாணவி கல்லூரியின் 3ம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி திண்டுக்கல்
    சென்னையில் பெண் இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலி ஐஏஎஸ் அதிகாரி தமிழ்நாடு
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் திருச்சி

    காவல்துறை

    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - கொள்ளையர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்கு திடீர் சிக்கல் திருவண்ணாமலை
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை புதுச்சேரி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023