LOADING...
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ்
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று இரவு ஒரு பழ வியாபாரியை வெட்டிவிட்டு, மர்ம நபர் தப்பி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 20, 2023
08:57 am

செய்தி முன்னோட்டம்

சென்னை, சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் நேற்று இரவு ஒரு பெண்ணை, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். வெட்டுப்பட்ட அந்த பெண், ரயிலில் பழம் விற்பவர் எனவும், அவரது பெயர் ராஜேஸ்வரி எனவும் கண்டறியப்பட்டுள்ளது. அரிவாளால் வெட்டுப்பட்டவுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஸ்வரி, இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று, கடற்கரை-தாம்பரம் மார்கமாக செல்லும் எலெக்ட்ரிக் ரயிலில் பழங்கள் விற்றுவிட்டு, ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் இறங்கியுள்ளார். அவரை பின்தொடர்ந்து அந்த மர்ம நபரும் அதே ரயிலில் இருந்து இறங்கியதாகவும், ராஜேஸ்வரியை சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு, அந்த நபர் அதே ரயிலில் ஏறிஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மாம்பலம் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, ரயிலில் வியாபாரம் செய்யும் அனைவரையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு