Page Loader
7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை
சிசுபாலனின் அச்சுறுத்தலுக்கு பயந்து இந்த விவகாரத்தை அந்த சிறுமிகள் அப்போது யாரிடமும் சொல்லவில்லை.

7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை

எழுதியவர் Sindhuja SM
Nov 28, 2023
10:25 am

செய்தி முன்னோட்டம்

தனது 7 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்த கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் அந்த தாய்க்கு 40.6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து கேரள சிறப்பு விரைவு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மனநலம் சரியில்லாத தனது கணவனை விட்டு பிரிந்த பிறகு, மார்ச்-2018 முதல் செப்டம்பர்-2019 வரை சிசுபாலன் என்ற தனது காதலருடன் வசித்து வந்தார். அந்த காலகட்டத்தின் போது, சிசுபாலன் பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை கொடூரமாக துன்புறுத்தி இருக்கிறார். பாதிக்கப்பட்ட 7-வயது சிறுமியையும் அந்த சிறுமியின் 11-வயது மூத்த சகோதரியையும் சிசுபாலன் பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார்.

திலகவ்ன்ஜ்த்

தற்கொலை செய்து கொண்ட குற்றவாளி 

இதெல்லாம், அந்த சிறுமிகளின் தாயின் முன்னிலை நடந்திருக்கிறது. சிசுபாலனின் அச்சுறுத்தலுக்கு பயந்து இந்த விவகாரத்தை அந்த சிறுமிகள் அப்போது யாரிடமும் சொல்லவில்லை. இதனையடுத்து, தன் தங்கையுடன் அந்த வீட்டில் இருந்து தப்பித்த அந்த 11 வயது சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு தான், அந்த சிறுமிகளுக்கு நடந்த கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையின் போது, ​​முதல் குற்றவாளியான சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அந்த சிறுமிகளின் தாயின் மீது மட்டும் விசாரணை நடத்தப்பட்டது. குற்றம்சாட்ட தாயின் மற்றொரு காதலரும் அந்த குழந்தைகளை பாலியல் பலாத்தகாரம் செய்ததாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தற்போது குழந்தைகள் காப்பகத்தில் வசித்து வருகின்றன.