
கையில் பாம்புடன் வந்து கலெக்டர் அலுவலகத்தை அலற விட்ட நெல்லை பெண்! காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
நெல்லையில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என கையில் பாம்புடன் கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்புஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகன். இவருக்கு சமரச செல்வி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிதாக வீடு கட்டி உள்ளார்.
வீட்டுக்கான மின் இணைப்பு கேட்டு 2019ஆம் ஆண்டு மனு அளித்த நிலையில் தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.
இதனால் கடந்த நாட்களுக்கு முன்பு வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. பின் அந்த 3 அடி பாம்பை பிடித்து கலெக்டர் அலுவலகத்திலேயே விட்டு பதறவைத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || நெல்லையில் கையில் பாம்புடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த பெண்ணால் பரபரப்பு
— Thanthi TV (@ThanthiTV) April 24, 2023
* பசுமை வீடு திட்டத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு 3 ஆண்டுகளாக மின்இணைப்பு வழங்கவில்லை என புகார்
* மின் இணைப்பு இல்லாததால் வீட்டிற்குள் புகுந்த பாம்பு
* வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் ஆட்சியர்… pic.twitter.com/AFoNrnQ8mc