NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    01:33 pm
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி
    இது குறித்து ட்விட்டரில் பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்டிருக்கிறார்

    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை தமிழக முதலவர் ஸ்டாலின் கண்டிக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி, "நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில், தென்காசி மாவட்டம், கரும்பனூரில் கணினிகளின் உதிரி பாகங்கள், செல்போன்கள், பயன்படுத்திய பேட்டரிகள், வாகன உதிரிபாகங்கள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திறந்த வெளியில் கொளுத்தப்பட்டன." என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கழிவுகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்ட கழிவுகள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    2/2

    பாஜக தலைவர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் கூறி இருப்பதாவது

    கழிவு மேலாண்மையில் கேரளா முதலிடம் வகிக்கிறது என்று பெருமையாக தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சொல்லி கொள்கிறது. ஆனால், கழிவுகள் அனைத்தையும் நம் தமிழகத்தில் எரித்து தமிழர்களின் உயிருக்கு உலை வைக்கிறது கேரள கம்யூனிஸ்ட் அரசு. மாவட்ட எல்லைகளில் அமைந்துள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை சோதனை சாவடிகளில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பது தான் இந்த அவல நிலைக்கு காரணம். சமீபத்தில் கேரளா சென்றிருந்த தமிழக முதல்வர் கேரள முதல்வரிடம் தமிழர்களை பாதிக்கும் இந்த விவகாரம் குறித்து தன் கண்டனத்தை தெரிவித்தாரா? இல்லையெனில், தமிழகத்தை தன் குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளாவை கண்டிக்காதது ஏன்? என்பதை தமிழக முதல்வர் அவர்கள் விளக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாஜக
    திமுக
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    பாஜக

    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் ராகுல் காந்தி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பாஜக எம்எல்ஏ இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா

    திமுக

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ. புதுச்சேரி
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு

    தமிழ்நாடு

    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை சென்னை
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாக்ஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது தமிழ்நாடு செய்தி
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் - குவியும் பாராட்டுக்கள் கோவை

    மு.க ஸ்டாலின்

    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா
    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு தமிழ்நாடு
    ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு தமிழக அரசு
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023