திராவிட அரசியலின் கோட்டை தகர்ந்தது! கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி அடைந்தது ஏன்?
செய்தி முன்னோட்டம்
கடந்த 15 ஆண்டுகளாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த கொளத்தூர் தொகுதி, இன்று தவெக-வின் அலை வீச்சால் ஆடிப்போய்க் கிடக்கிறது. கடந்த தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு முதலமைச்சர், இன்று தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 40 ஆண்டுகால வீட்டுமனைப் பட்டா கோரிக்கை நிறைவேற்றப்படாதது மற்றும் தவெக தலைவர் விஜயின் ஆதரவு ஆகியவை திமுகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
அடிப்படை பிரச்சினைகளில் கவனம் இன்மை
தோல்விக்கான முக்கிய காரணங்கள்
கடந்த 5 ஆண்டுகளில் கொளத்தூருக்கு மெட்ரோ ரயில் இணைப்பு உள்ளிட்ட 54,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செயல்படுத்தியிருந்தாலும், 4,000 குடும்பங்களின் 40 ஆண்டுகால வீட்டுமனைப் பட்டா கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. மெட்ரோ வசதி வந்தாலும், சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்ற மக்களின் தினசரிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் திமுக கோட்டை விட்டுவிட்டது. கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கவுன்சிலர்கள் மீது மக்களுக்கு இருந்த கோபமும், மக்களின் நிஜப் பிரச்சினைகளைக் கவனிக்கத் தவறியதும்தான் ஸ்டாலினைப் பின்னடையச் செய்துவிட்டது.
விஜய்யின் தவெக ஏற்படுத்திய தாக்கம்
உளவுத்துறை எச்சரிக்கை
கொளத்தூரில் போட்டியிட வேண்டாம் என உளவுத்துறை எச்சரித்த போதிலும், அமைச்சர் சேகர் பாபு போன்ற முக்கிய நிர்வாகிகள் கொடுத்த தவறான உறுதிமொழிகளை நம்பி ஸ்டாலின் இங்கேயே போட்டியிட்டார். ஆனால், களத்தில் தேர்தல் பணிமனைகள் பரபரப்பின்றி இருந்ததே வீழ்ச்சிக்கான அறிகுறியாகத் தென்பட்டது. திராவிட அரசியலுக்குச் சவாலாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இங்கே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைத் தொடங்கியுள்ளது. விஜய்யின் எளிமையான பேச்சும், அவரது சினிமா பிம்பமும் இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை மொத்தமாகத் தவெக பக்கம் ஈர்த்துள்ளது. விஜய்யின் பலத்தை திமுக மிகசாதாரணமாகக் குறைத்து மதிப்பிட்டது மிகப்பெரியத் தவறாக முடிந்தது. இது ஒரு தொகுதியின் தோல்வி மட்டுமல்ல, ஒட்டுமொத்த DMK ஆட்சி முறையின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியின் வெளிப்பாடு.