Page Loader
ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு 
பதவியை இழக்கிறாரா நவீன் பட்நாயக்?!

ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் 2024: பின்னடைவை சந்திக்கும் நவீன் பட்நாயக் அரசு 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 04, 2024
10:52 am

செய்தி முன்னோட்டம்

ஆந்திராவை போல, ஒடிசாவிலும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிகை இன்று நடைபெறுகிறது. தற்போதைய நிலவரப்படி, பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு சதாப்தமாக ஒடிஷாவை ஆண்டு வந்த பிஜு ஜனதா தளம் கட்சி, வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஆளும் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் அரசு, 20 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி கட்சி, ஒடிசாவில், 34 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல காங்கிரஸ் கூட்டணி கட்சி 5 இடங்களில் முன்னணி வகிக்கிறது. மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

பாஜக முன்னிலை