அடுத்த 5 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
மே-23 முதல் மே-27 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸாகவும் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை மே-25 முதல 27 வரை: மன்னார் வளைகுடா மற்றும் தமிழக-ஆந்திர கடலோர பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மே-26, 27: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
Twitter Post
pic.twitter.com/OPiHZQx2xh— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 23, 2023