தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
எழுதியவர்
Sindhuja SM
May 15, 2023
06:31 pm
செய்தி முன்னோட்டம்
நேற்று வங்கக்கடலில் நிலவிய அதிதீவிர புயலான 'மோக்கா புயல்' நேற்று மதியம் வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்க தேசத்தின் கடற்கரையை கடந்தது. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, மே 15 முதல் மே 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே 18 மற்றும் மே 19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸாகவும் இருக்கும்.
embed
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பதிவாகிய மழையின் புள்ளிவிவரங்கள்
pic.twitter.com/2tTERTI5lx— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 15, 2023