தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன்-6 மற்றும் ஜூன் 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன்-8 முதல் ஜூன்-10 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 செல்சியஸாகவும் இருக்கும்.