
பிப்பர்ஜாய் புயல், பருவமழை: தமிழகத்திற்கான மழை எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனைத்து இடங்களிலும் தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது.
மேலும், தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 12 மற்றும் ஜூன் 13
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன்-14 முதல் ஜூன்-16 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
details
'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை:
பிப்பர்ஜாய் புயல் வடக்கு நோக்கி மணிக்கு ஐந்து கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, குஜராத்தின் போர்பந்தரில் இருந்து தென்மேற்கே சுமார் 340-கிமீ தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளது.
இது ஜூன் 15ஆம் தேதி அன்று கட்ச் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர் மற்றும் தேவ்பூமி துவாரகா ஆகிய மாவட்டங்கள் இந்த புயலால் பாதிக்கப்படலாம் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு கடற்பகுதிகளில் உள்ள மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.