Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Mar 19, 2024
07:20 pm

செய்தி முன்னோட்டம்

நேற்றைய காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு விதர்பாவிலிருந்து வடக்கு கேரளா வரை தென் தமிழகத்திலிருந்து மேற்கு விதர்பா மற்றும் உள்பகுதியில் உள்ள கர்நாடகா முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 0.9 கிமீ உயரத்தில் காற்றழுத்த சுழற்சியாக காணப்படுகிறது. மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை ஜார்க்கண்டிலிருந்து வடக்கு கடற்கரை ஆந்திரப் பிரதேசம் வரை ஒடிசா வழியாக சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 19 மற்றும் மார்ச் 20 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம்

மார்ச் 21 முதல் மார்ச் 24 வரை 

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையின் வானிலை நிலவரம் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.