தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
வடக்கு ஒடிசாவிலிருந்து கிழக்கு விதர்பா வரையிலான நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இப்போது மேற்கு வங்கத்தின் இமயமலையில் இருந்து கடலோர ஆந்திரா வரை கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் நிலவுகிறது. நேற்றைய காற்றழுத்த தாழ்வுநிலையானது மராத்வாடாவில் இருந்து கொமோரின் பகுதி வரை கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள்பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மார்ச் 16 முதல் மார்ச் 22 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னையின் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.