Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Mar 01, 2024
06:42 pm

செய்தி முன்னோட்டம்

குறைந்த வெப்பமண்டல மட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை கீழைக்காற்று /வடகிழக்கு காற்று நிலவுகிறது. வடக்கு கேரளாவில் இருந்து கொங்கன் வரை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கிமீ உயரத்தில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது குறைந்துள்ளது. மார்ச் 1 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 2 முதல் மார்ச் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 7 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் 

சென்னையின் வானிலை நிலவரம் 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை.