
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
ஜனவரி 31
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தின் ஓரிரு பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
பிப்ரவரி 1 மற்றும் பிப்ரவரி 2
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வானிலை நிலவரம்
பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 5 வரை
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை.