
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
செய்தி முன்னோட்டம்
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால், ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஏப்ரல் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஏப்ரல் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
ட்விட்டர் அஞ்சல்
தமிழகத்திற்கான வானிலை செய்தி சுருக்கம்
வானிலை செய்தி சுருக்கம் - 24.04.2023 pic.twitter.com/XnVM8eNqVz
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 24, 2023