தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஏப்ரல் 11ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-3 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.