
வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தன் இரண்டு நாள் தனிப்பட்ட பயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று(பிப் 15) ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் சரிவுகளில் அவர் பனிச்சறுக்கு விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
நேற்று மாலை நடந்த இந்த நிகழ்வில் செய்தியாளர்களின் கேள்விகளை கேட்க ராகுல் காந்தி மறுத்துவிட்டார்.
ராகுல் காந்தி தனிப்பட்ட பயணத்தில் இருப்பதாகவும், பள்ளத்தாக்கில் நடைபெறும் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றும் காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மாதம், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி முடித்தார்.
அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்த்தில் சில சர்ச்சைக்குரிய உரைகளை அவர் பேசினார். தற்போது அவர் தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் ராகுல் காந்தியின் வீடியோ
As a reward, Rahul Ji treating himself to a perfect vacation in Gulmarg after successful #BharatJodoYatra.#RahulGandhi@RahulGandhi pic.twitter.com/DDHCDluwCC
— Farhat Naik (@Farhat_naik_) February 15, 2023