மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்
டெல்லி துவாரகாவில் உள்ள ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையின் விரிவாக்கத்தை இன்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர், மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களுடன் குதூகலமாக உரையாடினார். மெட்ரோ பயணிகள் கைதட்டி "ஹேப்பி பர்த்டே மோடி ஜி" என்று பாடினர். அதன் பிறகு, அவர்கள் பிரதமர் மோடியுடன் 'செல்பி' எடுத்து கொண்டனர். தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி சாக்லேட் வழங்கினார். அதன் பின், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்(டிஎம்ஆர்சி) ஊழியர்களிடம் அவர் பேசினார். இதனையடுத்து, அவர் டெல்லி துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின்(ஐஐசிசி) முதல் கட்டத்தை திறந்து வைத்தார்.