Page Loader
ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு
ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது - கிரண் ரிஜிஜு

எழுதியவர் Nivetha P
Apr 06, 2023
08:03 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டத்திருத்தத்தில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை விவரங்களை இணைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதற்கான காலஅவகாசம் ஆகஸ்ட் 1, 2021 முதல் மார்ச் 31, 2023 வரை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இந்த இணைப்பு குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை கெடு கொடுக்கப்படுகிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் அளித்துள்ளார். மேலும் அவர், ஆதார் எண்ணினை வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்படாதவர்களின் பெயர்கள் நிச்சயம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

ஆதாரை வாக்காளர் அட்டையுடன் இணைக்காதவர்களின் பெயர் நீக்கப்படாது