
வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய உணவு டெலிவரி செய்யும் நபர்: வைரலாகும் வீடியோ
செய்தி முன்னோட்டம்
வீட்டிற்கு வெளியே கிடந்த ஷூவை திருடிய ஸ்விக்கி டெலிவரி செய்யும் நபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வைரலாகும் அந்த வீடியோவில், மளிகை பொருட்களுடன் ஒரு டெலிவரி செய்யும் நபர் ஒரு வீட்டின் மணியை அடிப்பது தெரிகிறது.
அதன் பிறகு, மளிகை பொருட்களை டெலிவரி செய்தவுடன் அவர் தலையில் கட்டியிருக்கும் துணியை அவிழ்த்து அதில் ஒரு ஷூவை திருடி சென்றிருக்கிறார்.
இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஸ்விக்கி நிறுவனம், "ஏய் ரோஹித், எங்களின் டெலிவரி பார்ட்னர்களிடமிருந்து நாங்கள் நல்லவைகளை எதிர்பார்க்கிறோம். எங்களை DM இல் சந்திக்கவும், அப்படியானால் தான் நாங்கள் உங்களுக்கு சிறப்பாக உதவ முடியும்." என்று தெரிவித்துள்ளது
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் வீடியோ
Swiggy's drop and PICK up service. A delivery boy just took my friend's shoes (@Nike) and they won't even share his contact. @Swiggy @SwiggyCares @SwiggyInstamart pic.twitter.com/NaGvrOiKcx
— Rohit Arora (@_arorarohit_) April 11, 2024