வைரல் வீடியோ - மணமகளின் முகத்தில் எரிந்த தீ
வைரல் வீடியோ - திருமணங்கள் என்றாலே பலவித கொண்டாட்டங்கள் நிச்சயம் அரங்கேறும். அது போல் மணமக்கள் இருவரும் தங்கள் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு அதில் தீ வரும் பொழுது புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்கள். அதன்படி மண கோலத்தில் மணப்பெண்ணும் மணமகனும் மேடையில் நின்று கொண்டிருக்கிறார்கள். இருவரும் தங்கள் கையில் பொம்மை துப்பாக்கியினை வைத்து கொண்டு அதில் தீ வருவது போல் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்கள். அப்போது எதிர்பாராவிதமாக மணமகளின் முகத்தில் துப்பாக்கியின் பின்புறம் இருந்து தீ வெளியேறி பற்றியுள்ளது. சட்டென்று தீயினை அணைக்க அப்பெண் முயற்சி செய்கிறார். வைரலாகும் இந்த வீடியோ பதிவு மூலம் மணப்பெண்ணுக்கு அதிகளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது தெரிகிறது.