மாறும் அரசியல் களம்: விஜய் vs உதயநிதி? - தமிழகத்தின் புதிய அதிகார போட்டி!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அரை நூற்றாண்டுகாலமாக தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு துருவங்களைச் சுற்றிச் சுழன்ற தமிழக அரசியல், இன்று விஜய் vs உதயநிதி என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் ஆளுங்கட்சியின் வாரிசு மற்றும் துணை முதலமைச்சர் என்ற பலத்துடன் உதயநிதி ஸ்டாலின் களம் காண, மறுபுறம் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் புதிய படையுடன் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்யத் துடிக்கிறார் நடிகர் விஜய்.
மாற்றத்திற்கான புதிய குரல் விஜய்
பாரம்பரிய அரசியலின் நவீன முகம்
கருணாநிதி மற்றும் ஸ்டாலின் என இருபெரும் ஆளுமைகளின் அரசியல் பாரம்பரியம் அவருக்குப் பின்னால் உள்ளது. துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற முறையில் அரசுதிட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவர் காட்டிய வேகம், அவருக்கு இளைஞர்கள் மத்தியில் ஒரு நற்பெயரை ஈட்டித் தந்தது. நீண்டகால நட்பு மற்றும் கொள்கை அடிப்படையில் அமைந்துள்ள வலுவான கூட்டணி உதயநிதிக்கு மிகப்பெரிய பிளஸ்பாயிண்ட் ஆக உள்ளது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனது 'தமிழ வெற்றி கழகம்' (TVK) மூலம் தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளார். திரையில் மட்டுமின்றி, நிஜத்திலும் அவரது ரசிகர் மன்றங்கள் மூலம் செய்த சமூகப் பணிகள் அவருக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன
கொள்கை முழக்கம்
சமூக வலைதளப் போர்
"திராவிட மாடல்" மற்றும் "அதிமுகவின் அணுகுமுறை" ஆகிய இரண்டிற்கும் மாற்றாக ஒரு புதிய பாதையை முன்வைப்பதே விஜயின் வியூகம். குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் (First-time Voters) மற்றும் திராவிடக் கட்சிகளின் மீது அதிருப்தியில் உள்ள பொதுமக்களின் வாக்குகளை விஜய் குறிவைக்கிறார். 2026 தேர்தல் முடிவுகள் காட்டும் தற்போதைய நிலவரப்படி, பல தொகுதிகளில் திமுக மற்றும் தவெக வேட்பாளர்களுக்கிடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. டிஜிட்டல் களத்தில் உதயநிதி மற்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமாக உள்ளன. உதயநிதி ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக முன்னிறுத்த திமுக முயலும் வேளையில், மாற்றம் வேண்டும் என்ற கோஷத்துடன் விஜய் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.
அதிரடி மற்றம்
தமிழக அரசியல் நிலவரம்
விஜய் மற்றும் உதயநிதி ஆகிய இருவருமே சினிமா பின்புலத்தைக் கொண்டவர்கள் என்றாலும், அவர்களின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் வேறானது. உதயநிதி ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட ஒரு சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளார். விஜய் ஒரு புதிய சித்தாந்தத்தைக் கட்டமைத்து, ஆட்சியில் பங்கு (Power Sharing) என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ளார். இந்த மோதல் தமிழக அரசியலில் ஜாதி மற்றும் மதவாத அரசியலைத் தாண்டி, திறமை மற்றும் புதிய திட்டங்களை முன்வைக்கும் தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியல் களம் தற்போது ஒரு புதிய தலைமுறைத் தலைவர்களின் கைகளில் சிக்கியுள்ளது. பழைய தலைமுறையின் பிடியிலிருந்து விலகி, புதிய மாற்றங்களை நோக்கி மக்கள் நகரத் தொடங்கியுள்ளதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.