Page Loader
மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கிய விஜய்

மாநிலத்தில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு வைர கம்மல், வைர மோதிரம் வழங்கிய விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 28, 2024
05:13 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் விஜய், இன்று மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி வருகிறார். சென்ற ஆண்டு 12ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் வழங்கினார் விஜய். அந்த வகையில் இந்த வருடம், பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு வைர கம்மலும், 10 ஆம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு வைர மோதிரமும் பரிசாக வழங்கினார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் இந்த விழாவில் முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

தளபதி விஜய் கல்வி விருது விழா 

ட்விட்டர் அஞ்சல்

தளபதி விஜய் கல்வி விருது விழா