LOADING...
இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய் 

இரு பக்கமும் எக்காளமிடும் யானைகள், வாகை மலர்: TVK கட்சி கொடியை அறிமுகம் செய்தார் விஜய் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2024
09:04 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய் தனது கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ கொடியை இன்று அறிமுகம் செய்தார். நேற்று TVK அறிவித்ததை போல, இன்று காலை 9:15 மணியளவில் கட்சியின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் கட்சியின் கொடியினை செய்தார் விஜய். கொடி வெளியிடும் முன்னர் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்காக, இன்று காலை பனையூர் கட்சி அலுவலகத்தை சுற்றியும், நடிகர் விஜயின் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியை சுற்றியும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் விஜயின் தந்தை இயக்குனர் சந்திரசேகரும், அவரின் தாய் ஷோபாவும் கலந்துகொண்டனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கொடி மற்றும் பாடல்

கொடி மற்றும் பாடல் பற்றிய விவரங்கள்

TVK கட்சி கொடி மங்களத்தை குறிக்கும் மஞ்சள் நிறமும், புரட்சியை குறிக்கும் வகையில் சிவப்பு நிறத்திலும் அமைந்திருந்தது. இதில் இருப்பக்கமும் யானைகள் எக்காளமிட, வெற்றியை குறிக்கும் வாகை மலர் சின்னமாக பொறிக்கப்பட்டுள்ளது. தும்பிக்கையை தூக்கி எக்காளமிடும் யானைகள் உற்சாகத்தை, வெற்றி, கோபத்தினை குறிக்கும். அதனைத்தொடர்ந்து கட்சியின் பாடல் திரையிடப்பட்டது. 'தமிழன் கொடி பறக்குது' என துவங்கும் இந்த பாடலுக்கு இசையமைத்திருப்பது தமன் என கூறப்படுகிறது. கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட இந்த பாடலிற்கு வரிகளை எழுதியிருப்பது விவேக் எனவும் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழக வெற்றி கழகத்தின் கொடி