திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்! மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?
செய்தி முன்னோட்டம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் தொகுதியைத் தொடர்ந்து தனது இரண்டாவது தொகுதியான திருச்சி கிழக்கில் இன்று (ஏப்ரல் 2) அதிகாரப்பூர்வமாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த விஜய், மாநகராட்சி இரண்டாவது மண்டலக் குழு அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது மனுவை ஒப்படைத்தார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தைத் தொடங்கியிருந்த நிலையில், தற்போது திருச்சியிலும் அவர் கோதாவில் குதித்திருப்பது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#தேர்தல்திருவிழா | திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்.#SunNews | #TrichyEast | #TVKVijay pic.twitter.com/mrOv5MnmpR
— Sun News (@sunnewstamil) April 2, 2026
மும்முனைப் போட்டி
திருச்சி கிழக்குத் தொகுதியின் மும்முனைப் போட்டி நிலவரம்
திருச்சி கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை, இந்த முறை ஒரு கடுமையான மும்முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. ஆளும் திமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் க.ராஜசேகரன் போட்டியிடுகிறார். தற்போது இவர்களுடன் தவெக தலைவர் விஜய்யும் இணைந்திருப்பது தேர்தலை மிகவும் விறுவிறுப்பாக்கியுள்ளது. 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்பதே தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.
வாக்கு வங்கி
வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் முக்கிய வாக்கு வங்கிகள்
திருச்சி கிழக்குத் தொகுதியானது முழுக்க முழுக்க நகர்ப்புறப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு பெண் வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகளவில் உள்ளன. கடந்த முறை இந்த வாக்கு வங்கிகளின் ஆதரவுடன் இனிகோ இருதயராஜ் வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு விஜய் பக்கம் திரும்பும் பட்சத்தில், அவரது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.