LOADING...
தமிழகத்தின் முதலமைச்சராகிறார் விஜய்! நாளை காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா!
தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்கிறார்.

தமிழகத்தின் முதலமைச்சராகிறார் விஜய்! நாளை காலை 10 மணிக்கு நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா!

எழுதியவர் Vasuki
May 09, 2026
08:32 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் களத்தில் நீடித்து வந்த இழுபறிகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், நாளை (மே 10, ஞாயிற்றுக்கிழமை) காலை மணிக்குத் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்கிறார். தவெக தலைவர் விஜய், தமக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்தார். காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் பிற தோழமை இயக்கங்களின் ஆதரவுடன் மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை விஜய் சமர்ப்பித்தார்.

தலைவர்களுடன் சந்திப்பு

ஆளுநரிடம் உரிமை கோரல்

பெரும்பான்மை ஆதரவு தொடர்பான சிக்கல்கள் முழுமையாகத் தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். தமக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலைச் சமர்ப்பித்தார். விஜய்யின் பெரும்பான்மை பலத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அவரை புதிய அரசு அமைக்க முறைப்படி அழைத்துள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்

நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா

பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகின்றன. இடம்: சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம். நேரம்: நாளை பிற்பகல் 3:15 மணி. லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சென்னைக்கு வர வாய்ப்புள்ளதால், நேரு விளையாட்டரங்கில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

மிகுந்த எதிர்பார்ப்பு

வரலாற்று தருணம்

தமிழக அரசியல் வரலாற்றில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்குப் பிறகு ஒரு திரைத்துறை பிரபலம் கட்சித் தொடங்கி, முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை நிகழ்த்தி அரியணை ஏறுவது இதுவே முதல் முறையாகும். தனிப்பெரும் கட்சியாக (Single Largest Party) உருவெடுத்து, பல்வேறு முற்போக்கு மற்றும் இடதுசாரி இயக்கங்களின் ஆதரவைப் பெற்று விஜய் ஆட்சியமைப்பது ஒரு புதிய கூட்டணி கலாச்சாரத்திற்குத் தமிழகத்தில் வித்திட்டுள்ளது. மக்களின் முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் அந்தத் தருணத்தைக் காண ஒட்டுமொத்தத் தமிழகமும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement