Page Loader
போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
போர் விமானத்தில் பறக்கும் மூன்றாவது குடியரசு தலைவர் இவர் ஆவர்.

போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

எழுதியவர் Sindhuja SM
Apr 08, 2023
01:23 pm

செய்தி முன்னோட்டம்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார். அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்தில், சுகோய் 30 MKI போர் விமானத்தில் நுழைவதற்கு முன், அவர் புவியீர்ப்பு எதிர்ப்பு உடை அணிந்திருப்பதை காண முடிந்தது. இந்தியாவின் முப்படை தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தற்போது அசாமில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன், 2009ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதே போர் விமானத்தில் பறந்திருக்கிறார். சுகோய்-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரட்டை இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானம் ஆகும். இது இந்தியாவின் விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உரிமத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

குடியரசு தலைவர் முர்மு போர் விமானத்தில் பறந்த போது எடுக்கப்பட்ட வீடியோ