
வீடியோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி
செய்தி முன்னோட்டம்
உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயிலில் ஏற முயன்ற முதியவர் அதிசயமாக உயிர் தப்பினார்.
சஜ்ஜன் சிங்(63) என்ற நபர், பிளாட்பாரத்தில் மதிய உணவு வாங்குவதற்காக, குவாஹாட்டியில் இருந்து பிகானேர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கினார்.
ஆனால், அவர் மீண்டும் ஏறுவதற்குள் அவரது ரயில் புறப்பட்டது. உடனே ரயிலை நோக்கி ஓடிய அவர், ரயிலில் ஏற முயன்றார்.
ஆனால், அவர் ரயில் படியில் காலை வைத்து தவறி விழுந்தார்.
இந்நிலையில், ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே விழ இருந்த அவரை, அதே பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சஞ்சய் குமார் ராவத் காப்பாற்றினார்.
அந்த சம்பவத்தின் போது பதிவான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
ஓடும் ரயிலில் தவறி விழ இருந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே காவல் அதிகாரி
आज प्रयागराज जं. से गाड़ी सं. 15634 के चलने के बाद ट्रेन में चढ़ने के प्रयास में एक यात्री सज्जन सिंह फिसलकर प्लेटफ़ॉर्म और कोच के बीच गिर गया।
— North Central Railway (@CPRONCR) April 14, 2024
स्टेशन पर तैनात @rpfncr के सoउoनिo श्री संजय कुमार रावत ने अदम्य साहस का परिचय देते हुए यात्री को बाहर निकाला और उसकी जान बचाई। pic.twitter.com/8bpST70PBH