சட்லெஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளான வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
சென்னை முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மகனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு தனது நண்பருடன் சென்றிருந்த வெற்றி துரைசாமியின் கார், சென்னைக்கு திரும்பும் வழியில், கஷங் நாலா பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், வெற்றியுடன் சென்ற கோபிநாத் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
ஆனால், வெற்றி துரைசாமி பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில், இன்று அவரின் சடலம் சட்லெஜ் நதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆற்றங்கரையோரம் கிடைத்த மனித மூளையின் திசுக்கள் கொண்டு, DNA பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு
Watch | இமாச்சலப் பிரதேச கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு!
— Sun News (@sunnewstamil) February 12, 2024
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் ஒரே மகனான வெற்றி துரைசாமி, கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது… pic.twitter.com/WTpT4aDJQ9